நாமக்கல்:
முதியவரை அடித்து கொலை செய்த வழக்கில், இருவருக்கு, ஆயுள் தண்டனை
விதித்து, நாமக்கல் மாவட்ட கூடுதல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
நாமக்கல்
மாவட்டம், குமாரபாளையம், ஜே.கே.கே., சுந்தரம் நகரைச் சேர்ந்தவர் நேரு, 60.
அவர், 2015, ஆக., 2 இரவு, 10:30 மணிக்கு, குடிபோதையில் திட்டிக் கொண்டி
வந்தார். அப்போது, வெப்படை உப்புபாளையம் தனபால், 31, குமாரபாளையம்,
பரமகவுண்டர் நகர், சுந்தரம் காலனி சோமசுந்தரம், 31, ஆகியோர் அவ்வழியாக
சென்றனர். ஆனங்கூர் பிரிவு சாலை, மூங்கில் கடை அருகில் வந்தபோது,
உறவினர்களான இருவரும், அவர் தங்களைத்தான் திட்டுவதாக எண்ணி, ஆத்திரமடைந்து,
செங்கல்லால், முதியவரை தாக்கினர். படுகாயம் அடைந்தவர், சம்பவ இடத்திலேயே
உயிரிழந்தார். குமாரபாளையம் போலீசார் தனபால், சோமசுந்தரம் ஆகியோரை கைது
செய்தனர். மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. நீதிபதி இளங்கோ
நேற்று தீர்ப்பளித்தார். அதில், இருவருக்கும் ஆயுள் தண்டனை, தலா, 1,000
ரூபாய் அபராதம் விதித்தார். மேலும், அபராதத்தை செலுத்த தவறினால், ஆறு மாதம்
சிறை தண்டனை வழங்கப்படும் என, உத்தரவிட்டார். இருவரும், கோவை மத்திய
சிறையில் அடைக்கப்பட்டனர்.