மோடிகேர் திட்டத்தில் இருந்து மேற்குவங்கம் விலகல் : முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவிப்பு

2018-02-14@ 13:00:55

கொல்கத்தா: மோடிகேர் எனப்படும் மத்திய அரசின் தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டத்தில் இருந்து விலகி கொள்வதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்குவங்க மக்களுக்கு மாநில அரசின் சார்பில் ஏற்கனவே மருத்துவ காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார். இப்படி இருக்க மத்திய அரசின் மோடிகேர் திட்டத்தில் சேர வேண்டிய அவசியம் என்ன என்பது மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

எனவே மாநிலத்தின் நிதியை இத்திட்டத்திற்காக வீணடிக்க விரும்பவில்லை என்பதால் மோடிகேர் திட்டத்தில் இருந்து விலகி கொள்வதாக மம்தா பானர்ஜி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மோடிகேர் காப்பீட்டு திட்டத்தில் 60 சதவீதம் மத்திய அரசின் பங்காகவும், 40 சதவீதம் மாநில அரசின் பங்களிப்பாக இருக்கும். இதனால் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்கனவே அமலில் உள்ள மாநில அரசின் காப்பீட்டு திட்டத்தின் நிலை என்னவாகும் என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!