தோல்வியை சரிக்கட்ட சந்தானத்தின் அடுத்த திட்டம் | கௌதம் மேனன் இயக்கத்தில் டிடி | சர்ச்சையில் சிக்கிய புருவநாயகி பிரியா வாரியர் | கட்சியை பதிவு செய்ய தீவிரம் : கமல் ஆலோசனை | மார்ச்-9ல் அபியும் அனுவும் ரிலீஸ்..! | 'காயங்குளம் கொச்சுன்னி' படப்பிடிப்பில் இணைந்தார் மோகன்லால் | ஒன்றரை கோடி பார்வையாளர்களை கவர்ந்திழுத்த புருவ நாயகி | காதலை வெளிப்படுத்திய 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' பர்ஸ்ட்லுக் | யப் டிவியில் டுவென்டி-20 போட்டிகள் நேரடி ஒளிப்பரப்பு | நாச்சியார், கமர்ஷியலாக வெற்றி பெறுவாரா பாலா ? |
தமிழில் மதராசப்பட்டினம் படத்தில் அறிமுகமான லண்டன் நடிகை எமி ஜாக்சனை, அதற்கடுத்து ஹிந்தியில் தான் இயக்கிய விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் ரீமேக்கான ஏக் திவானா தா படத்தில் நடிக்க வைத்தார் கெளதம்மேனன். அதையடுத்து தமிழ், தெலுங்கு படங்களில் நடித்தபடியே ஹிந்தியிலும் தொடர்ந்து நடித்து வருகிறார் எமிஜாக்சன்.
ஹாலிவுட் டிவி ஷோவிலும் நடித்து வந்த எமிஜாக்சன், இனிமேல் இந்திய படங்களில் நடிக்க மாட்டார் என்று கூறப்பட்டது. ஆனால், இப்போது அவர் மீண்டும் இந்திய படங்களில் கமிட்டாகி வருகிறார். கன்னடத்தில் தயாராகி வரும் தி வில்லன் படத்தில் சிவராஜ்குமாருடன் இணைந்து நடித்து வரும் எமி, இந்த படத்தை அடுத்து ஹிந்தியில் சல்மான்கான் நடிக்கும் கிக்-2 என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படம் இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்கு பிறகு தொடங்குகிறது. முன்னதாக இப்படத்தில் கிக் முதல்பாகத்தில் நடித்த ஜாக்குலின் பெர்ணான்டஸ் நடிக்க இருந்தார். தற்போது அவர் விலகியுள்ளார்.