வறுமையில் வாடிய பாட்டி நடிகைக்கு நடிகர் சங்கம் உதவி | மதுரை அரசரடியில் கமலின் முதல் மாநாடு | காதலர் தினத்தில் ரசிகர்களை ஈர்த்த சினிமாக்காரர்கள் | சினிமாவிற்கு கமல் குட்-பை | நானும் காதலில் விழுந்தேன் : ரைசா வில்சன் | சண்டைக்காட்சி லீக் : விஜய் படக்குழு அதிர்ச்சி | 'மாரி 2' படத்தில் இணைந்த வரலட்சுமி | மீண்டும் வந்தார் மமதி சாரி | பிளாஷ்பேக் : காலம் மறந்த வில்லன் | 40 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கையில் தயாரான தமிழ் படம் |
இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ் டைரக்சனில் நிவின்பாலி தற்போது நடித்துவரும் படம் 'காயங்குளம் கொச்சுன்னி'. பிரியா ஆனந்த் இதில் கதாநாயகியாக நடிக்கிறார். கேரளாவில் எண்பதுகளில் நிஜமாகவே வாழ்ந்த திருடன் 'காயம்குளம் கொச்சுண்ணி' கேரக்டரில் நிவின்பாலி நடிக்கிறார்.
இந்தப்படத்தில் இதிக்கரா பக்கி என்கிற முக்கிய கேரக்டரில் மோகன்லால் நடிக்கிறார். ராபின்ஹூட் பாணியில் கேரளாவில் உருவாகிய முதல் கொள்ளையன் என்றால் அது இதிக்கரா பக்கி தானாம். அதனால் தான் இந்த கேரக்டரில் மோகன்லால் நடிக்க வேண்டும் என இயக்குனர் கோரிக்கை வைக்க மோகன்லாலும் மறுக்காமல் ஒப்புக்கொண்டு விட்டார்.
ஏற்கனவே இந்தப்படத்தின் படப்பிடிப்பு பாதிக்கு மேல் நடந்துவிட்ட நிலையில் தற்போது மங்களூரில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் இன்றுமுதல் மோகன்லால் கலந்து கொண்டுள்ளார். மோகன்லாலின் வரவை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர் படக்குழுவினர்.