SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நிதி சீர்திருத்தம் தொடர்பான மத்திய அரசின் மசோதாவுக்கு எதிராக மாபெரும் போராட்டம்: மம்தா அறிவிப்பு

2018-02-14@ 20:04:38

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம், நாடியா மாவட்டத்தில், கிருஷ்ணா நகரில் நடந்த கூட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி  பேசியதாவது:
மத்திய அரசு நிதித்தீர்வு மற்றும் வைப்புத்தொகை காப்பீடு எனும் மசோதாவைக் கொண்டுவந்துள்ளது. இந்த மசோதா சட்டமானால், மக்கள் வங்கியில் செலுத்திய பணத்துக்கு பாதுகாப்பு இருக்காது. மக்களின் பணத்தை மத்திய அரசு கொள்ளையடிக்க முயன்றால், மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம். வங்கியில் இருக்கும் எங்களின் பணம் பாதுகாப்பாக இல்லை. வங்கியில் பணம் பாதுகாப்பாக இல்லாத போது, பக்கோடா எப்படி சாப்பிடமுடியும்?.

மாநிலத்தில் அடுத்து நடக்க இருக்கும் பஞ்சாயத்து தேர்தலில் மக்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். அரசியல் ஆதாயத்துக்காக பாஜகவினர் சாதி, மத மோதல்களை தூண்டிவிடுவார்கள். மக்கள் மடிந்தாலும், வீடுகள் தீ வைத்து கொளுத்தப்பட்டாலும், அவர்கள் கவலைப்படமாட்டார்கள். நாம் இந்துக்களாக இருந்தாலும், அனைத்து மதங்களுக்கும் சமமான முக்கியத்துவம், அளித்து மதிக்கிறோம். ஆதலால், பாஜகவிடம் இருந்து இந்துத்துவத்தை கற்றுக்கொள்ள தேவையில்லை. மேற்கு வங்கத்தில் நாங்கள் எப்படி அரசு நடத்துகிறோம் என்பதை பார்த்து மத்திய அரசு எங்களிடம் இருந்து கற்க வேண்டும்.

1300 கி.மீ தொலைவுக்கு கிராமத்தில் சாலைகள் அமைத்துள்ளோம். 25 லட்சம் வீடுகளை ஏழைகளுக்கு கட்டிக்கொடுத்துளோம். இலவச சுகாதாரத் திட்டத்தையும், ரூ.20க்கு அரிசியை கொள்முதல் செய்து கிலோ 2 ரூபாய்க்கு மக்களுக்கு கொடுக்கிறோம். அகதிகளுக்கும் 13 ஆயிரம் நிலப்பட்டாக்கள் வழங்கி இருக்கிறோம். இதுபோன்ற அரசை நாட்டில் எங்கும் பார்த்து இருக்க முடியாது. இவ்வாறு மம்தா பானர்ஜி பேசினார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Haitimarketfire

    வரலாற்று சிறப்பு வாய்ந்த ஹெய்டி சந்தையில் மாபெரும் தீ விபத்து: ஏராளமான கடைகள் எரிந்து சாம்பல்

  • kochi_fireblast11

    கொச்சி துறைமுகத்தில் ஓஎன்ஜிசி கப்பலில் குழாய் வெடித்துச் சிதறியது : 5 பேர் உயிரிழப்பு

  • maga_shiva_aakro_paa

    மகா சிவராத்திரியை ஆக்ரோஷமாக கொண்டாடிய பக்தர்கள் ! : நெஞ்சை பதைபதைக்கும் படங்கள்

  • south_africa1

    தென்னாப்பிரிக்க மண்ணில் முதன்முறையாக ஒருநாள் தொடரைக் கைப்பற்றி இந்திய அணி சாதனை

  • Christianslent

    கிறிஸ்தவர்களின் தவக்காலம் இன்று தொடங்கியது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்