புதுச்சேரி: புதுச்சேரிக்கு வந்த இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் ரோட்டோர டீ கடையில் டீ அருந்தி, டீ ஆற்றி பார்த்தார்.
இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் கென்னத் ஜஸ்டர் புதுச்சேரி வருகை தந்துள்ளார். புதுச்சேரியின் பாரம்பரிய கட்டடங்களை இன்று காலை பார்வையிட்டார். சாலை அமைப்பினை ஆய்வு செய்த அவர் துப்புரவு தொழிலாளர்கள்,பூ விற்கும் பெண்கள் ஆகியோரிடம் புகைப்படம் எடுத்து கொண்டார்.
தொடர்ந்து பாய்லர் டீ குறித்து கேள்வி பட்ட அவர் ரயில் நிலையம் எதிரில் உள்ள டீ கடைகாரரிடம் அது குறித்து கேட்டறிந்தார். அங்கு தனது அதிகாரிகளுடன் டீ குடித்தார். தொடர்ந்து டீ ஆற்றுவதை பார்த்து தானும் டீ ஆற்றினார். தொடர்ந்து அவர் கூறும் போது பாய்லர் டீ சுவையாக இருக்கும் என்பதால் அறிந்தினேன் என்றும்,டீயும் புதுச்சேரி சுவையாகவும் அழகாகவும்இருப்பதாக தெரிவித்தார்.