மட்டக்களப்பு – திருமலைவீதியில் விபத்து! இளைஞர் ஒருவர் பலி!

மட்டக்களப்பு – திருகோணமலை வீதி சீனன்குடா பகுதியில் பொலிஸ் நிலையத்திற்குச் சமீபமாக இன்று இடம்பெற்ற வீதி விபத்தில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்றவர் ஸ்தலத்திலேயே பலியானதாக சீனன்குடா பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்றவர் மீது அதிவேகமாகச் சென்ற டிப்பர் கனரக வாகனம் மோதியதிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது. மூதூர் பெரியபாலம் பகுதியைச் சேர்ந்த 21 வயதான உம்முஹஸன் ஸப்ரி என்பவரே விபத்தில் பலியாகியுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தினை அடுத்து ஸ்தலத்திற்குச் சென்ற பொலிஸார் டிப்பர் வாகனச் சாரதியைக் கைது செய்துள்ளதோடு மேலதிக விசாரணைகளிலும் ஈடுபட்டுள்ளனர். சடலம் உடற் கூறு பரிசோதனைக்காக கிண்ணியா ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தொடர்டர்புடைய செய்திகள்
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதூர் பகுதியில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ்
மட்டக்களப்பு – மண்முனைப் பற்று ஆரையம்பதி பிரதேச சபையில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரின் வீட்டின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்
மட்டக்களப்பு புதுமுகத்துவாரம் களப்பு பகுதியில் கண்டெடுக்கப்பட்ட ஆணின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் மட்டக்களப்பு பொதுச்சந்தை வியாபார சங்கத்தின் தலைவரான

About காண்டீபன்

மறுமொழி இடவும்

*