இஸ்லாமாபாத் : இந்தியா தாக்குதலில் ஈடுபட்டால் அதே அளவில் திருப்பி கொடுப்போம் என்று பாகிஸ்தான் மிரட்டல் விடுத்துள்ளது. காஷ்மீர் மாநிலம் சஞ்சுவான் ராணுவ முகாமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷி -இமுகமது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.சஞ்சுவான் ராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாதுகாப்பு விவகாரம் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்ட மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்திய வீரர்களில் உயிர் தியாகம் வீணாகாது என்றும் பாகிஸ்தான் தவறுக்கு விலை கொடுக்க நேரிடும் என்றும் எச்சரித்தார்.இந்நிலையில் பாகிஸ்தானும் பதிலுக்கு மிரட்டல் விடுத்துள்ளது
.பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை மந்திரி குர்ரம் விடுத்துள்ள அறிக்கையில், இந்தியா எந்தவொரு தவறான தாக்குதல் தொடுத்தாலும் பாகிஸ்தான் உரிய பதிலடியை தரும் என்று கூறியுள்ளார்.நாட்டை காப்பதற்கு பாகிஸ்தான் படைகள் முழுமையான தயார் நிலையில் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்தியா வலுச்சண்டைக்கு வந்தால் தவறாக கணித்தால், தவறான தாக்குதலில் ஈடுபட்டால் அதே அளவில் திருப்பி கொடுப்போம் என்று அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.