திருச்சி: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் சோமாஸ்கந்தர் சிலை செய்ய, 5.50 கிலோ தங்கம் வழங்கியதில் ஊழல் நடந்ததாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசுக்கு தகவல் வந்தது. அதன்பேரில் போலீசார் ஆய்வு செய்ததில் சுவாமி சிலையில் ஒரு கிராம் தங்கம் கூட இல்லை என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக சிலை செய்த ஸ்தபதி முத்தையன் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். திருச்சி ஆயுதப்படை மைதானத்தில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் கையெழுத்திட்டு விசாரணைக்கு ஆஜராகி வரும் முத்தையன், வெளிநாடு தப்பிச் செல்லாமல் தடுக்க உத்தரவிட வேண்டும் என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து முத்தையன் வெளிநாடு செல்லாமல் வழங்கப்பட்டது.