தண்ணீர் தட்டுப்பாட்டால் பெங்களூர் உள்ளிட்ட உலகின் 11 நகரங்கள் தவிக்கும் : அதிர்ச்சி தகவல்

2018-02-13@ 09:10:45

டெல்லி :  தண்ணீர் தட்டுப்பாட்டால் பெங்களூர் உள்ளிட்ட உலகின் 11 நகரங்கள் தவிக்கும் என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தென் ஆப்பிரிக்காவின் கேப் டவுன் நகரில் தண்ணீர் தேவையை தீர்க்க அரசு போராடி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் மேலும் 11 பெருநகரங்களிலும் விரைவில் இந்த நிலை ஏற்படும் என அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் கர்நாடக தலைநகர் பெங்களூர் 2-வது இடம் பிடித்துள்ளது. பிரேசிலின் சா பாலோ முதலிடத்தில் உள்ளது. பெய்ஜிங், கெய்ரோ, ஜகார்த்தா, மாஸ்கோ, இஸ்தான்புல், மெக்சிகோ சிட்டி, லண்டன், டோக்யோ, மியாமி ஆகிய நகரங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!