டெல்லி: என்.எல்.சி பற்றி மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் டெல்லியில் பேட்டி அளித்தார். கடந்த 4 ஆண்டுகளில் என்.எல்.சி-யில் மின் உற்பத்தி 2 மடங்காக உயர்ந்துள்ளது என்று தெரிவித்தார். 2,700 மெகாவாட்டில் இருந்து 5,700 மெகாவாட்டாக மின் உற்பத்தி அதிகரித்துள்ளது என்று கூறினார். சூரியசக்தி மூலம் 4000 மெகாவாட் மின்சாரம் 2025க்குள் உற்பத்தி செய்யப்படும் என்று தெரிவித்தார். மேலும் 2020-2025-ம் ஆண்டில் என்.எல்.சி-யின் மொத்த உற்பத்தி 13,700 மெவா ஆக உயரும் என்று கூறினார்.
தாமோதர் வேலி நிறுவனத்தில் இருந்து ரகுநாத்பூர் அனல்மின் நிலையத்தை வாங்க என்.எல்.சி முடிவு செய்துள்ளது. என்.எல்.சி லாபம் ரூ.2,369 கோடி என்று மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.