மும்பை: நாடு முழுவதும் இன்று மகா சிவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனைமுன்னிட்டு இந்திய பங்குச்சந்தைகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பங்குகள், அந்நிய செலாவணி, பணம் மற்றும் கமாடிட்டி சந்தைகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.