மலைப் பாம்புடன் போஸ் கொடுத்த நிவேதா தாமஸ் | அடுத்த கட்டத்திற்கு நகரும் ரஜினிகாந்த் | 'நாச்சியார்' உடன் போட்டி போடும் மற்ற படங்கள் ? | பிரபலங்களையும் ரசிக்க வைக்கும் பிரியா வாரியர் | டப்பிங் பேசாதது ஏன்? - அனுஷ்கா | கேத்ரின் தெரசா ரோலில் மேகா ஆகாஷ் | ரசிகர்கள் கையில் ரஜினியின் காலா அறிமுக பாடல் | கரு படத்திற்கு யு/ஏ சான்றிதழ் | என் வாழ்க்கையில் எந்த திட்டமிடலும் இல்லை : ரகுல் ப்ரீத் சிங் | பாலசந்தர் அலுவலகம் ஏலம் - கவிதாலயா மறுப்பு |
நடிகை ஷாலினியின் தம்பி ரிச்சர்ட். காதல் வைரஸ் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். கிரிவலம், நாளை, யுகா, வைரம், பெண் சிங்கம், நேற்று இன்று, அதிபர், கள்ளாட்டம், பழைய வண்ணாரப்பேட்டை உள்பட பல படங்களில் நடித்தார். ஆனால் தமிழில் ஒரு நிலையான இடத்துக்கு அவரால் வர முடியவில்லை. தெலுங்கு படங்களில் ஓரளவிற்கு தாக்குப்பிடித்து நின்றார். அங்கும் அவருக்கு சமீபகாலமாக சரியான படங்கள் அமையவில்லை.
தமிழில் அவர் நடித்த ரெண்டாவது படம் உள்ளிட்ட சில தமிழ்படங்கள் வெளிவராமல் இருக்கிறது. இந்த நிலையில் ரிச்சர்ட் தற்போது ஓ.பி.கூ.ஹா என்ற தெலுங்கு காமெடி படத்தில் நடித்துள்ளார். இதில் ரிச்சர்டுடன் சாக்ஷி சவுத்திரி, சிந்து அபான் நடித்துள்ளனர். நிதி பிரசாத் இயக்கி உள்ளார். அனு ரூபன்ஸ் இசை அமைத்துள்ளார், பாக்யலட்சுமி தயாரித்துள்ளார். இந்த படம் தனக்கு நல்லதொரு இடத்தை கொடுக்கும் என்று நம்பிக் கொண்டிருக்கிறார் ரிச்சர்ட். படம் தெலுங்கில் வெற்றி பெற்றால் அதனை தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிடவும் திட்டமிட்டிருக்கிறார்.