ஐத்ராபாத்: ஏப்ரல் 5க்குள் ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி மிரட்டல் விடுத்துள்ளார். அந்தஸ்து வழங்காவிட்டால் ஏப்ரல் 6ம் தேதி எம்பிக்கள் ராஜினாமா செய்வார்கள் என்றும் கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு 9 எம்பிக்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.