நாமக்கல்: நாமக்கல்லில், தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் விலை நிர்ணய ஆலோசனை குழு உறுப்பினர்கள் கூட்டம் நேற்று நடந்தது. இதில், முட்டை விலையில் மேலும் 10 காசுகள் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 380 காசாக நிர்ணயிக்கப்பட்டது. பிற மண்டலங்களில் முட்டை விலை உயர்ந்து வருவதால், நாமக்கல் மண்டலத்திலும் முட்டை விலை உயர்த்தப்பட்டு வருவதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர். ஒரு கிலோ முட்டைக்கோழி ரூ.52 ஆகவும், ஒரு கிலோ கறிக்கோழி ரூ.67 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டது. மற்ற மண்டலங்களில் முட்டை விலை விபரம்(காசுகளில்):சென்னை 395, ஐதராபாத் 371, மும்பை 395, மைசூர் 397, பெங்களூரு 377, டில்லி 393.