சென்னை: கடம்பத்தூர்-திருவலங்காடு ரயில் நிலையங்களுக்கு இடையே பரமாரிப்பு பணி நடைபெற உள்ளதால், செஞ்சி, பணம்பாக்கம் நிலையங்களில் ரயில் நிற்காது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கடம்பத்தூர்-திருவலங்காடு ரயில் நிலையங்களுக்கு இடையேயான தண்டவாளப்பகுதியில் பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் இன்று (செவ்வாக்கிழமை) முதல் வருகிற 19ம் தேதி வரை 6 நாட்கள் கீழ்கண்ட மின்சார ரயில்கள் செஞ்சிபணம்பாக்கம் ரயில் நிலைத்தில் நிற்காது.
மூர்மார்க்கெட்-அரக்கோணம் இடையே காலை 9.10 மணி மற்றும் 11.05 மணி ஆகிய நேரங்களில் இயக்கப்படும் ரயில்கள், மூர்மார்க்கெட்-திருத்தணி இடையே காலை 10 மணிக்கும், 11.45 மணிக்கும் இயக்கப்படும் ரயில்கள் உள்ளிட்ட ரயில் சேவைகள் செஞ்சி பணம்பாக்கம் ரயில் நிலையத்தில் நிற்காது. இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.