தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கிராம மக்கள் விடிய விடிய உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டனர். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நிறுவனம் மேற்கொண்டு வரும் தாமிர உருக்காலை விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடி-நெல்லை சாலையில் எம்ஜிஆர் பூங்கா முன் அ.குமரெட்டியார்புரம் கிராம மக்கள் விடிய விடிய போராட்டம் நடத்தி வருகின்றனர்.