நியுயார்க்: நிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்பும் முயற்சியில் நாசா ஈடுபட்டுள்ளது. இதற்காக அமெரிக்க பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நிலவுக்கு ரஷ்யா ஸ்புட்னிக் என்ற நாய் ஒன்றை அனுப்பி வெற்றிகரமாக திரும்பக் கொண்டு வந்தது. இதற்கு போட்டியாக அமெரிக்காவின் விண்வெளித் துறையான நாசா மனிதர்களை அனுப்பும் முயற்சியை கையில் எடுத்தது. நிலவில் பெரும் முயற்சிகளுக்கும், பல தோல்விகளுக்கும் அடுத்து 1969ம் ஆண்டு ஜூலை மாதம் 20 தேதி நீல் ஆம்ஸ்ட்ராங் அங்கு சென்று அமெரிக்க கொடியை நாட்டினார். அதன்பின் இஸ்ரோ தவிர மற்ற எந்த நாடுமே நிலவில் ஆராய்ச்சி செய்யாமல் அமைதி காத்து வந்தன. இந்த நிலையில் தற்போது அமெரிக்கா மீண்டும் நிலவு ஆராய்ச்சியை கையில் எடுத்துள்ளது. இதற்காக அமெரிக்க பட்ஜெட்டில் 1.20 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதலை அதிபர் டிரம்ப் அளித்துள்ளார். இதனால் 2019 நிதியாண்டில் பணிகளை நாசா தொடங்கி விடும். அதன்பின் நிலவு பயணத்திற்கான திட்டங்கள் தயாரிக்கப்படும்.
சர்வதேச விண்வெளி நிலையத்துடன் நாசாவுக்கான ஒப்பந்தம் 2024ல் முடிவடைகிறது. ஆனால் நிலவு தொடர்பான ஆராய்ச்சிக்கு மனிதர்களை மீண்டும் அனுப்ப இருப்பதால் இந்த ஒப்பந்தத்தை நீட்டிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இதற்காக 2025ல் பணத்தை செலுத்தி குறைந்தது 2028ம் ஆண்டு வரை நீட்டிக்க நாசா முடிவு செய்துள்ளது. மேலும் இதற்கான பணிகளில் தனியார் நிறுவனத்தையும் இணைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்பின் எத்தனை பேரை விண்கலத்தில் நிலவுக்கு அனுப்பலாம் என்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது. மேலும் துணை அதிபர் மைக் பென்ஸ் தலைமையில் தேசிய விண்வெளி கவுன்சில் அமைப்பை விரிவுபடுத்தவும் டிரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. ராணுவம் மற்றும் ெபாதுத்துறை நிர்வாகம் இடையே ஒருங்கிணைப்பை கொண்டு வருவது இதன் நோக்கம் ஆகும். கடந்த ஆண்டு அக்டோபரில் இதன் முதல் கூட்டம் நடந்தது. தற்போது இந்த மாதம் மீண்டும் கூட்ட அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.