ஆர்.எஸ்.எஸ். அல்லாத விஎச்பி, பஜ்ரங்தள், சங் பரிவார் போன்ற இந்து அமைப்புகளை கண்காணிக்க உளவுத்துறைக்கு சுற்றறிக்கை

2018-02-13@ 11:36:10

புதுடெல்லி: ஆர்.எஸ்.எஸ். அல்லாத பிற இந்துத்துவா அமைப்புகளின் செயல்பாடுகளை கூர்ந்து கவனிக்க வேண்டும் என்று புலனாய்வு அதிகாரிகளுக்கு உளவுத்துறை சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறது. விஸ்வ இந்து பரிசத், பஜ்ரங்தள் உள்ளிட்ட சங் பரிவார் அமைப்புகள் தொடர்புடைய விவகாரங்களை கண்காணித்து எச்சரிக்கையுடன் கையாள வேண்டும் என்று உளவுத்துறை அந்த சுற்றறிக்கையில் அறிவுறுத்தியுள்ளது. கடந்த ஆண்டு ஜீன் மாதம் விஸ்வ இந்து பரிசத் தலைவர் பிரவீண் தொகாடியா, இந்தியாவில் உள்ள ஹெல்ப்லைன் தொலைபேசிகள் ஒட்டு கேட்கப்படுவதாக உளவுத்துறை இயக்குநருக்கு புகார் கடிதம் எழுதியிருந்தார்.

அதற்காக உளவுத்துறை பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார். இதனையடுத்தே 7 மாதங்கள் கழித்து தற்போது ஆர்.எஸ்.எஸ். அல்லாத இந்துத்துவா அமைப்புகளின் செயல்பாடுகளை கூர்ந்து கவனிக்க வேண்டும் என உளவுத்துறை உத்தரவிட்டுள்ளது. விஎச்பி தலைவர் பிரவீண் தொகாடியா பிரதமர் நரேந்திர மோடியுடனான பனிப்போரின் தொடர்ச்சியாகவே இந்த சுற்றறிக்கை பார்க்கப்படுகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!