ஜிம்பாப்வே - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் ஒருநாள் போட்டித் தொடர் ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது. பிப். 9ம் தேதி நடந்த முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 333 ரன் குவிக்க (ரகமத் ஷா 114), ஜிம்பாப்வே 34.4 ஓவரில் 179 ரன்னுக்கு சுருண்டது. அடுத்து 11ம் தேதி நடந்த 2வது போட்டியில் ஜிம்பாப்வே 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 333 ரன் குவிக்க (பிரெண்டன் டெய்லர் 125), ஆப்கானிஸ்தான் 30.1 ஓவரில் 179 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இந்த அபூர்வ ஒற்றுமை கிரிக்கெட் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் 1-1 என சமநிலை வகிக்க, 3வது போட்டி இன்று நடக்கிறது.