யப் டிவியில் டுவென்டி-20 போட்டிகள் நேரடி ஒளிப்பரப்பு | நாச்சியார், கமர்ஷியலாக வெற்றி பெறுவாரா பாலா ? | மார்ச்சில் திரைக்கு வரும் ரஞ்சித்தின் பரியேறும் பெருமாள் | அடுத்தடுத்து மூன்று மெகா படங்களை தயாரிக்கும் லைகா | தமிழ் சினிமாவில் விவசாய டிரண்ட் | சல்மான்கானுடன் ஜோடி சேரும் எமிஜாக்சன் | தனுஷ் இயக்கும் படத்தில் சுதீப் | மலைப் பாம்புடன் போஸ் கொடுத்த நிவேதா தாமஸ் | அடுத்த கட்டத்திற்கு நகரும் ரஜினிகாந்த் | 'நாச்சியார்' உடன் போட்டி போடும் மற்ற படங்கள் ? |
ஜெயராம் மகன் காளிதாஸின் முதல் படமான ஒரு பக்க கதையில் நாயகியாக கமிட்டானவர் மேகா ஆகாஷ். அந்த படம் திரைக்கு வராத நிலையில், அதையடுத்து கெளதம்மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடித்தார். இந்தப்படமும் இன்னும் முடியவில்லை. என்றபோதும், அதர்வாவுடன் பூமாரங் என்ற படத்திலும் நடித்து வருகிறார் மேகா ஆகாஷ்.
இந்த நிலையில், தமிழில் அதர்வா-கேத்ரின் தெரசா நடித்த கணிதன் படம் தெலுங்கில் ரீமேக் ஆக உள்ளது. தமிழில் நடித்த கேத்ரின் தெரசாவே தெலுங்கிலும் நடிக்க தீவிர முயற்சி எடுத்து வந்தார். ஆனால், அந்த அந்த வாய்ப்பை இப்போது மேகா ஆகாஷ் அதிரடியாக கைப்பற்றி கேத்ரின் தெரசாவுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.