கட்சியை பதிவு செய்ய தீவிரம் : கமல் ஆலோசனை | மார்ச்-9ல் அபியும் அனுவும் ரிலீஸ்..! | 'காயங்குளம் கொச்சுன்னி' படப்பிடிப்பில் இணைந்தார் மோகன்லால் | ஒன்றரை கோடி பார்வையாளர்களை கவர்ந்திழுத்த புருவ நாயகி | காதலை வெளிப்படுத்திய 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' பர்ஸ்ட்லுக் | யப் டிவியில் டுவென்டி-20 போட்டிகள் நேரடி ஒளிப்பரப்பு | நாச்சியார், கமர்ஷியலாக வெற்றி பெறுவாரா பாலா ? | மார்ச்சில் திரைக்கு வரும் ரஞ்சித்தின் பரியேறும் பெருமாள் | அடுத்தடுத்து மூன்று மெகா படங்களை தயாரிக்கும் லைகா | தமிழ் சினிமாவில் விவசாய டிரண்ட் |
சமீபகாலமாக தெலுங்கில் வெளியாகும் மெகா படங்கள் மட்டுமின்றி சிறிய படங்களாக இருந்தாலும் அந்த படங்களைப்பார்த்து விட்டு தனது கருத்தினை மனம் திறந்து பேசி வருகிறார் பாகுபலி டைரக்டர் ராஜ மவுலி. அந்த வகையில், கடந்த வாரம் வருண்தேஜ் நடிப்பில் வெளியான தொலி பிரேமா படத்தைப் பார்த்து அவர் வெகுவாக பாராட்டியுள்ளார்.
அதுகுறித்து ராஜமவுலி தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், நான் காதல் படங்களின் ரசிகன் அல்ல. ஆனால், தொலி பிரேமா படம் என்னை ரசிக்க வைத்து விட்டது. வருண்தேஜ் சிறப்பாக நடித்துள்ளார். ராசிகண்ணா அழகாகவும் இருக்கிறார், அழகாகவும் நடித்துள்ளார் என்று சொல்லி தோலி பிரேமா படத்தையும், அதில் பணியாற்றியவர்களையும் பாரட்டியுள்ளார் ராஜமவுலி.