அடுத்த கட்டத்திற்கு நகரும் ரஜினிகாந்த் | 'நாச்சியார்' உடன் போட்டி போடும் மற்ற படங்கள் ? | பிரபலங்களையும் ரசிக்க வைக்கும் பிரியா வாரியர் | டப்பிங் பேசாதது ஏன்? - அனுஷ்கா | கேத்ரின் தெரசா ரோலில் மேகா ஆகாஷ் | ரசிகர்கள் கையில் ரஜினியின் காலா அறிமுக பாடல் | கரு படத்திற்கு யு/ஏ சான்றிதழ் | என் வாழ்க்கையில் எந்த திட்டமிடலும் இல்லை : ரகுல் ப்ரீத் சிங் | பாலசந்தர் அலுவலகம் ஏலம் - கவிதாலயா மறுப்பு | ரங்கஸ்தலம் முதல் பாடல் இன்று மாலை வெளியீடு |
நடிகை அனுஷ்கா சினிமாவில் அறிமுகமாகி 12 வருடங்கள் ஆகி விட்டது. அந்த வகையில், தமிழ், தெலுங்கில் இதுவரை அவர் 47 படங்களில் நடித்து விட்டார். தமிழை விட தெலுங்கு மொழியில் சரளமாக பேசுவார். ஆனால் இதுவரை அவர் தான் நடித்த எந்தவொரு படத்திற்கும் தனக்குத்தானே டப்பிங் பேசியதில்லை. இதுகுறித்து டோலிவுட்டில் சிலர் அனுஷ்காவிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதற்கு அனுஷ்கா பதிலளிக்கையில், நான் நடிக்கும் கதாபாத்திரங்களுக்கு டப்பிங் பேச வேண்டும் என்ற ஆசை எனக்கும் இருந்து வருகிறது. ஆனால், எனது தோற்றத்தை விட எனது குரல் சின்னப்பெண் பேசுவது போன்று இருக்கும். எனது வீட்டில் இருப்பவர்கள்கூட குழந்தை பேசுவது போல் இருப்பதாக கிண்டல் செய்வார்கள்.
அதோடு, நான் நடிக்கும் கதாபாத்திரங்களுக்கு கம்பீரமான குரல் தேவை. அந்த வேடங்களுக்கு குழந்தைத்தனமாக பேசினால் காமெடியாக இருக்கும். கேரக்டரும் ஒர்க்அவுட் ஆகாது. அதனால் தான் டப்பிங் பேச வேண்டும் என்ற ஆசை எனக்குள் இருந்தபோதும், டப்பிங் பேச வேண்டும் என்று டைரக்டர்களிடம் நான் கேட்டதில்லை என்கிறார் அனுஷ்கா.