அகர்தலா: திரிபுரா மாநிலத்தில் தேர்தல் வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பா.ஜ.க. தொண்டர்களை இடதுசாரி முன்னணி கட்சியினர் கொலை செய்துள்ளதாக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அமித்ஷா குற்றம்சாட்டியுள்ளார். தலைநகர் அகர்தலாவில் செய்தியாளர்களிடம் பேசிய அமித்ஷா பாஜக தொண்டர்கள் இருவர் கடத்தப்பட்டு மரத்தில் தூக்கில் தொங்கவிடப்பட்டுள்ளதாக கூறினார்.
திரிபுராவில் அதிகாரிகள் இடதுசாரி முன்னணி அரசின் அழுத்தத்தால் வேலை செய்வதாகவும் குற்றம்சாட்டினார். திரிபுரா மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி முன்னணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்குள்ள 60 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் பிப்ரவரி 18-ம் தேதி நடைபெறுகிறது. இதனையடுத்து காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சியினர்
தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.