சிஎம்டிஏ எல்லை கட்டுபாட்டில் 1709 கிராமங்கள் இணைக்கப்படுகிறது. இப்போது இருக்கும் சென்னை பரப்பளவை காட்டிலும் 7.4 மடங்கு பரப்பளவு பெரிதாகிறது. இதன் மூலம் மக்கள் தொகையை அதிகரிக்கும். மக்கள் தொகை அதிகரிக்கும் போது, அடிப்படை தேவை அதிகரிக்கும். முதலில் குடிநீர் என்று பார்த்தால், தற்போது இருக்கும் மக்கள் தொகைக்கே பக்கத்து மாவட்டங்களில் உள்ள நீர் ஆதாரங்களை நம்பி தான் உள்ளோம். மக்கள் தொகை அதிகரிக்கும் போது அடுத்தடுத்த மாவட்டங்களை நம்பி நகர வேண்டிய நிலை ஏற்படும்.
சென்னை மாநகராட்சி ஒரு நாளைக்கு 5 ஆயிரம் முதல் 7 ஆயிரம் டன் குப்பை சேகரிக்கப்பட்டு கொடுங்கையூர், பெருங்குடி குப்பை கிடங்குகளில் கொட்டப்படுகிறது. 25 வருடம் தான் குப்பை கிடங்கின் வாழ்நாள். ஆனால், 25 வருடம் முடிந்தும் புதிதாக குப்பை கிடங்கை மாநகராட்சி ஏற்படுத்தவில்லை. திரும்ப, திரும்ப அதே கிடங்கில் தான் கொட்டப்படுகிறது. 7 மடங்கு சென்னை விரிவாக்கம் செய்யும் போது, 40 டன் குப்பை சேகரிக்க வேண்டிய நிலை ஏற்படும்.. அப்படியிருக்கும் போது, புதிதாக கிடங்கை ஏற்படுத்தவோ, குப்பையை சேகரிக்கவோ எந்த திட்டமும் நம்மிடம் இல்லை. இதனால், அதை எப்படி கையாள்வார்கள் என்பது தெரியவில்லை.
சிஎம்டிஏ எல்லை விரிவாக்கம் செய்யும் சென்னையில் போக்குவரத்து பிரச்னை இருக்கிறதோ, அதே பிரச்னை விரிவாக்கம் செய்யப்ப டும் பகுதிகளிலும் போக்குவரத்து பிரச்னை வர வாய்ப்புள்ளது. இப்போது இருப்பதை விட ஒரு மெகா டிராபிக்கை சந்திக்க வேண்டியிருக்கும். அதற்கான உட்கட்டமைப்போ எதுவும் நம்மிடம் இல்லை. இப்போது இருக்கிற விரிவாக்கம் செய்யப்படும் பகுதி இந்தியாவிலேயே டெல்லிக்கு அடுத்த படியாக பெரிய மாநகரமாக வரப்போகிறது. டில்லியில் இப்போது இருக்கும் இரண்டு பிரச்னை ஒன்று காற்று மாசுபாடு, மற்றொன்று போக்குவரத்து நெரிசல் தான். நினைத்தது போன்று பக்கத்து தெருவிற்கு சென்று விட முடியாத படி போக்குவரத்து நெரிசல் டெல்லியில் உள்ளது. அதே அளவுக்கு காற்றுமாசுபாடும் அங்கு உள்ளது. ஏற்கனவே சென்னை காற்று மாசுபாட்டில் அபாயகரமான பகுதியாக தான் உள்ளது. ஆனால், டெல்லியை சென்னையுடன் ஒப்பிடும் நமக்கு கடல் காற்று நம்மை காப்பாற்றி வருகிறது. இல்லையெனில் டெல்லியை விட மோசமான நிலையில் தான் நாம் இருப்போம். இந்த நிலைமையில் இன்னும் வாகன நெருக்கம் என்பது இன்னும் நிலைமை மோசமாக இருக்கச் செய்யும். 200 வருடத்திற்காக திட்டமிட்டாவது இருக்க வேண்டும்.
சென்னை மாநகர் எல்லை அதிகமாகும் போது, சுற்றுச்சூழலில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. அதாவது பக்கத்து புறநகர் பகுதியை காட்டிலும் சென்னை மாநகர் பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும். எல்லை பகுதி விரிவாக்கும் போது வெயில் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. புறநகர் பகுதி மேம்படுத்தப்படவில்லை. இன்னும் பொதுமக்கள் அங்கு செல்லவில்லை. நாம் இன்னும் சரியாக பயன்படுத்தவில்லை. அங்கு இன்னும் பொதுமக்கள் செல்ல வில்லை. மறைமலை நகர் துணை கோள் நகரம் ஆக்கப்படும் என்றனர். ஆனால், அந்த திட்டத்தை அவர்கள் தொடங்கவில்லை. அனைத்து தொழிற்சாலைகள் சென்னையில் அமைக்க வேண்டிய அவசியம் இல்லை. சிறு நகரங்களை கூட தொழில் நகரங்களாக மாற்றலாம். திருச்சி, மதுரை, நெல்லை, சேலம், தஞ்சாவூர் உட்பட பல நகரங்களை தொழில் நகரங்களாக மாற்றலாம். வேலை வாய்ப்புக்காக சென்னைக்கு வருகின்றனர். இது போன்ற தொழில் நகரங்களாக மாற்றும் பட்சத்தில் அவர்கள் சென்னை நோக்கி வர வேண்டிய நிலை ஏற்படாது. இதன் மூலம் சென்னை வரும் மக்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது. இதனால், இது போன்ற மெகா திட்டத்திற்கான வேலை இருக்காது.