தமிழக வேளாண் வளர்ச்சி விகிதம் மைனசில் உள்ளது : அன்புமணி குற்றச்சாட்டு

2018-02-12@ 01:04:28

கோவை: கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் பாமகவின் 2018-19-ம் ஆண்டுக்கான வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று வெளியிட்டார். நிகழ்ச்சியில் மாநில இளைஞரணி தலைவர் அன்புமணி, கட்சியின் தலைவர் ஜி.கே.மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்நிகழ்ச்சியில் பாமக நிறுவன தலைவர் ராமதாஸ் பேசியதாவது:  தமிழகத்தில் நீர்ப்பாசன திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். வேளாண்மை துறை சார்ந்த பணிகளை கவனிக்க வேளாண்துறை, தோட்டக்கலைதுறை, வேளாண் சந்தை துறை, நீர்வள மேலாண்மை என 4 அமைச்சகங்கள் அமைக்க வேண்டும். இதில் 4 அமைச்சர்களை பணியமர்த்த வேண்டும். இவ்வாறு ராமதாஸ் பேசினார்.

அன்புமணி பேசியதாவது:  தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு வேளாண் வளர்ச்சி மைனஸ் 5 சதவீதமாகவும், கடந்த ஆண்டு மைனஸ் 8 சதவீதமாகவும் உள்ளது. இந்தியாவை பொறுத்தவரை தமிழகத்தில்தான் வேளாண் வளர்ச்சி விகிதம் மைனசில் உள்ளது. எங்கள் நிதி நிலை அறிக்கையில் வேளாண் துறைக்கு நாங்கள் 43 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியுள்ளோம். நிதிநிலை அறிக்கையில் கூறியபடி, 33 ஆறுகளில் 5 கி.மீ.க்கு ஒரு தடுப்பணை கட்டுவோம். இவ்வாறு அன்புமணி பேசினார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!