பேருந்து கட்டண வழக்கு: போக்குவரத்து செயலர் பதில் அளிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

2018-02-12@ 12:58:09

மதுரை: குறைக்கப்பட்ட பேருந்து கட்டணத்தை முறையாக அமல்படுத்தவில்லை என வழக்கறிஞர் ராஜேந்திரன் என்பவர் தொடர்ந்த வழக்கில், போக்குவரத்து செயலர் பதில் அளிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. போக்குவரத்து துறை ஆணையரும் பதில் தர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாற்றியமைக்கப்பட்ட கட்டண விவரம் பேருந்துகளில் ஒட்டப்படவில்லை என மனுதாரர் குற்றம்சாட்டியுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!