சென்னை: சட்ட சபையில் ஜெயலலிதா உருவப்படம் திறப்பு விழாவில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்க மாட்டார்கள் மற்றும் உருவப்படம் திறப்பதற்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருநாவுக்கரசர் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த ஊழல் வழக்கில், உச்ச நீதிமன்றத்தால் குற்றவாளி என இறுதி தீர்ப்பு வழங்கப்பட்ட மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உருவப்படத்தை தமிழக சட்டமன்றத்தில் பேரவை தலைவர் திறந்து வைப்பதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன். இந்த முயற்சியை கைவிட வேண்டுமென தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன். தமிழக சட்டமன்றத்தில் நாளை (இன்று) நடக்கவிருக்கிற ஜெயலலிதா உருவப்பட திறப்பு நிகழ்ச்சியில் சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் பங்கேற்க மாட்டார்கள்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.