Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விரைவில் கலகலப்பு-3 : தயாராகும் சுந்தர்.சி

12 பிப், 2018 - 17:39 IST
எழுத்தின் அளவு:
Sundar-C-to-make-Kalakalappu-3

விமல் சந்தானம் நடித்த 'கலகலப்பு' படம் வர்த்தக ரீதியில் மிகப்பெரிய வெற்றயடைந்ததைத் தொடர்ந்து 'கலகலப்பு-2' படத்தை இயக்க திட்டமிட்டார் சுந்தர்.சி. ஆனால் அதை செயல்படுத்த இத்தனை காலமாகிவிட்டது.

கடந்தவாரம் வெளியான கலகலப்பு - 2 படம் வெற்றிப்படமாக அமைந்திருப்பதால் இயக்குனர் சுந்தர்.சி உட்பட படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். ஒரு தனியார் தொலைகாட்சியில் சமீபத்தில் 'கலகலப்பு-2' படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார் சுந்தர்.சி..

அப்போது பேசும்போது இந்த படத்தின் மூன்றாம பாகம், நான்காம் பாகம் என்று கலகலப்புகள் தொடரும் என்று கூறினார். அதன் அர்த்தம்... கலகலப்பு -2 படம் வணிக ரீதியில் வெற்றிப்படமாக அமைந்திருப்பதால் விரைவில் அடுத்த பாகத்தை எடுக்க முடிவு செய்துள்ளார் சுந்தர்.சி.

'கலகலப்பு-3' படத்தில் ஜெய், ஜீவா இருவரும் கதாநாயகர்களாக நடிப்பதோடு, மிர்ச்சி சிவாவும் நடிக்கிறாராம்.

Advertisement
கார்த்திக் படத்தை காத்திருக்க வைத்த காலாகார்த்திக் படத்தை காத்திருக்க வைத்த ... சூர்யாவை தொடரும் 4 மில்லியன் பேர் சூர்யாவை தொடரும் 4 மில்லியன் பேர்


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in