மஸ்கட் : ராணுவம், சுகாதாரம், சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு துறைகளில், இந்தியா - ஓமன் இடையே, எட்டு ஒப்பந்தங்கள் நேற்று கையெழுத்தாகின.
பிரதமர், நரேந்திர மோடி, வளைகுடா நாடுகளான, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன் உள்ளிட்ட மூன்று நாடுகளுக்கு, அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். பயணத்தின் கடைசி கட்டமாக, தற்போது, ஓமன் சென்றுள்ள மோடி, அந்நாட்டின் சுல்தான், கபூஸ் பின் சயத் அல் சயத்துடன், நேற்று பேச்சு நடத்தினார்.
முன்னதாக, ஓமன் தலைநகர், மஸ்கட்டில், சுல்தான் கபூஸ் விளையாட்டுஅரங்கில், இந்திய வம்சாவளியினர் மத்தியில், பிரதமர் மோடி சிறப்புரை ஆற்றினார். அப்போது, ''இந்தியா - ஓமன் இடையிலான உறவு, எப்போதும் வலுவானதாக உள்ளது. இந்த உறவை மேலும் வலுப்படுத்த, ஓமனில் உள்ள இந்திய வம்சாவளியினர் பெரிதும் உதவி வருகின்றனர்,'' என்றார்.
மஸ்கட்டில், 125 ஆண்டுகள் பழமையான, ஆதி மோதீஸ்வர் மஹாதேவ் சிவன் கோவில் உள்ளது. அக்கோவிலுக்குச் சென்று பிரதமர் மோடி வழிபட்டார்.
ஓமனில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள, பிரதமர் மோடி, மஸ்கட்டில், நேற்று நடந்த, இந்தியா - ஓமன் தொழில் துறை மாநாட்டின் போது, வளைகுடா மற்றும் மேற்காசிய நாடுகளின் தொழில் துறையினரை சந்தித்து பேசினார். அப்போது, ''தொழில் துவங்க சரியான நாடு, இந்தியா,'' என்றார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து