மாநில உரிமையில் மத்திய அரசு தலையீடு : தம்பிதுரை குற்றச்சாட்டு

2018-02-12@ 01:08:37

கரூர்: மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கரூரில் நேற்று அளித்தபேட்டி:  நீட்தேர்வில் தமிழக அரசு தொடர்ந்து மவுனம் சாதிப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது. நீட்தேர்வு கூடாது என்பதுதான் எங்கள் நிலை. இது தமிழகத்தின் உரிமையை பறிக்கும் செயலாகும். எத்தனை டாக்டர்கள், இன்ஜினியர்கள் வேண்டும் என முடிவு செய்வதெல்லாம் மாநில உரிமை. இதில் மத்திய அரசு தலையிடுவது தேவையற்ற ஒன்று.

கோர்ட் தீர்ப்பை காட்டி செயல்படுத்துவது வருத்தம் அளிக்கிறது.  மாநில சுயாட்சி உரிமைகளை காக்க நீட்தேர்வு போன்றவற்றை நிரந்தரமாக வரவிடாமல் தடுப்பதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளோம். மாநில உரிமைகளை நாங்கள் காப்போம் என்றார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!