சென்னை: தமிழக சட்டப்பேரவையில் அமைக்கப்பட்டு இருக்கும் முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உருவ படத்துக்கு முன்பாக நின்று அதிமுகவினர் செல்பி எடுத்துக்கொண்டனர். 7 அடி உயரமும் 5 அடி அகலம் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் உருவ படம் முன்பாக எம்.பி.கள் , எம்.எல்.ஏ.க்கள் என்று முக்கிய அதிமுக பிரமுகர்கள் பலரும் செல்பி எடுத்து கொண்டனர்.
எம்.எல்.ஏ.க்கள் தவிர மற்ற நபர்கள் சட்டப்பேரவையின் தரை தளத்துக்கு வர அனுமதி கிடையாது. இது போன்ற சிறப்பு நிகழ்வுகளின் போது மட்டுமே வாய்ப்பு கிடைக்கும் என்பதால் நிகழ்ச்சி முடிந்தும் கூட ஜெயலலிதாவின் உருவ படத்தின் முன் சென்று பலரும் செல்பி எடுத்துக்கொண்டனர்.