சூர்யாவை தொடரும் 4 மில்லியன் பேர் | மூன்று நாளில் ரூ.40 கோடி - பட்டைய கிளப்பும் பேட் மேன் வசூல் | விரைவில் கலகலப்பு-3 : தயாராகும் சுந்தர்.சி | கார்த்திக் படத்தை காத்திருக்க வைத்த காலா | ஸ்கெட்ச் தெலுங்குப் பதிப்பில் 15 நிமிட காட்சிகள் நீக்கம் | அரசியலில் எதிரிகளாகும் ரஜினிகாந்த், கமல்ஹாசன் | மம்முட்டியின் 'மாமாங்கம்' படப்பிடிப்பு துவங்கியது | மோகன்லால் படத்தில் முக்கிய வேடத்தில் 'மாரி-2 வில்லன் | நிவின்பாலி பட வெற்றிக்கு பிரதாப் போத்தன் வருத்தம் கலந்த மகிழ்ச்சி..! | லாரியில் மணமக்களை அழைத்துவந்த மோகன்லால் பட இயக்குனர்..! |
ஜீவா தற்போது நடித்து வரும் படம் கொரில்லா. அவருடன் ஷாலினி பாண்டே நடிக்கிறார். படத்தில் நடிப்பது பற்றி ஜீவா கூறியதாவது:
கொரில்லா படம் வித்தியாசமான திரைக்கதையை கொண்டது. முழு நீள என்டர்டெயின்மென்ட் படம். இதன் படப்பிடிப்புகள் தாய்லாந்து பகுதியில் விரைவில் நடக்க இருக்கிறது. படத்தில் என்னுடன் சிம்பான்ஸி வகை குரங்கு நடிக்கிறது. அதனுடன் நடிப்பதற்காக தற்போது பழகி வருகிறேன். அந்த குரங்கிற்கு சாப்பிடு, நட, ஓடு உட்கார், வணக்கம் சொல்லு என்பது மாதிரியான சில வார்த்தைகள் தாய்லாந்து மொழியில் தெரியும், அதற்காக நானும் அந்த தாய்லாந்து வார்த்தைகள கற்று அதைக் கொண்டு அதனுடன் பழகி வருகிறேன். ஆரம்பத்தில் கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. போகப்போக அது என் பேச்சை கேட்க ஆரம்பித்துவிட்டது. படம் வெளிவரும் வரை அந்த குரங்கின் படத்தை வெளியிடக்கூடாது என்பது இயக்குனரின் அன்பு கட்டளை என்றார் ஜீவா.