தாம்பரம்: சென்னை அடுத்த மேற்கு தாம்பரம், கடப்பேரி, பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த காட்டு புண்ணை (எ) நந்தகுமார் (28) என்ற வாலிபரை, அதே பகுதியில் உள்ள அற்புதம் நகர் பகுதியை சேர்ந்த சுரேஷ் (27), கோல்ட் மணி (22), பெரிய அப்புனு (27), சின்ன அப்புனு (25) உட்பட 4 பேர் நேற்று இரவு அரிவாளால் சரமாரியாக வெட்டி உள்ளனர். இதனை பார்த்த பொதுமக்களை அவர்கள் கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த தாம்பரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நந்தகுமாரை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து வாலிபரை வெட்டிவிட்டு தப்பி ஓடியவர்களை தேடிவருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், ‘‘கோல்ட் மணி உட்பட அவனுடன் இருப்பவர்கள் மீது ஏராளமான வழக்குகள் உள்ளது. அவர்கள் ஏரியாவில் பெரிய ஆள் என்று கட்டிக்கொள்ளவும், ரவுடிகளாக தங்களை காட்டிக்கொள்ளவும் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதில் கோல்ட் மணி என்பவன் சில மாதங்களுக்கு முன்புதான் குண்டாசில் சிறைக்கு சென்று வந்திருந்தான். ’’ என தெரிவித்தனர்.