தேங்காய்சில் தொண்டையில் சிக்கி ஆசிரியை சாவு

2018-02-12@ 00:03:37

சிக்கமகளூரு: சிக்கமகளூரு மாவட்டம், இரேமகளூரு வீட்டுவசதி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் நவ்ய(28). ஆசிரியையான இவர் அதே பகுதியில் உள்ள அம்மன் கோவிலுக்கு செல்வது வழக்கம். நேற்றும் அம்மன் கோவிலுக்கு சென்ற போது வேண்டுதலுக்காக உடைக்கப்பட்ட தேங்காய் சில்லை எடுத்து சாப்பிட்டுள்ளார். அது தொண்டையில் சிக்கி கொண்டதால் மூச்சுவிட சிரமப்பட்ட அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

தேங்காய்சில் தொண்டையில் சிக்கி ஆசிரியை இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இறந்த நவ்ய-க்கு திருமணமாகி கணவர் மற்றும் ஒரு வயது பெண் குழந்தை இருப்பது குறிப்பிடத்தக்கது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விட்டு, வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!