ஆசிரியர் பணி நியமனத்தில் முறைகேடு : டிடிவி.தினகரன் கண்டனம்

2018-02-12@ 00:32:30

சென்னை: ஆர்கே நகர் எம்எல்ஏ டிடிவி.தினகரன் வெளியிட்ட அறிக்கை:  2013ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் எதிர்காலம் கேள்விகுறியாகியுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ் 7 ஆண்டுகள் மட்டுமே செல்லுபடியாகும் என்ற நிலையில் தற்போது 5 ஆண்டுகள் நிறைவுபெற்றுவிட்டது. ஆனால், அரசு எந்த முடிவையும் அறிவிக்காத நிலையில் 94,000 பேருக்கு இது மிகுந்த அச்சத்தை ஏற்பத்தியுள்ளது. இதை அரசு மிகுந்த அலட்சியத்தோடு கையாளுகிறது. மேலும், 2013ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு காலி பணியிடங்களில் முன்னுரிமை வழங்குவதற்கான அரசாணையை வெளியிட்டு அவர்களின் நீண்டகால போராட்டத்திற்கு நல்ல முடிவை ஏற்படுத்தி கொடுக்கும் பொறுப்பு இந்த அரசுக்கு உள்ளது.

1.22 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதிய தேர்வில் 200க்கும் அதிகமானோர் முறைகேட்டில் ஈடுபட்டதால் பாலிடெக்னிக் விரிவுரையாளர்களுக்கான தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் ரத்து செய்துள்ளது.  மேலும், நேர்மையாக தேர்வு எழுதியவர்களுக்கு பெரும் துன்பத்தை இந்த அரசு உருவாக்கியுள்ளது. அலட்சியத்தையும், ஊழல் குணத்தையும் வளர்த்துகொண்டிருக்கும் இந்த அரசிற்கு எனது கண்டனத்தை தெரிவித்துகொள்கிறேன்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!