சூர்யாவை தொடரும் 4 மில்லியன் பேர் | மூன்று நாளில் ரூ.40 கோடி - பட்டைய கிளப்பும் பேட் மேன் வசூல் | விரைவில் கலகலப்பு-3 : தயாராகும் சுந்தர்.சி | கார்த்திக் படத்தை காத்திருக்க வைத்த காலா | ஸ்கெட்ச் தெலுங்குப் பதிப்பில் 15 நிமிட காட்சிகள் நீக்கம் | அரசியலில் எதிரிகளாகும் ரஜினிகாந்த், கமல்ஹாசன் | மம்முட்டியின் 'மாமாங்கம்' படப்பிடிப்பு துவங்கியது | மோகன்லால் படத்தில் முக்கிய வேடத்தில் 'மாரி-2 வில்லன் | நிவின்பாலி பட வெற்றிக்கு பிரதாப் போத்தன் வருத்தம் கலந்த மகிழ்ச்சி..! | லாரியில் மணமக்களை அழைத்துவந்த மோகன்லால் பட இயக்குனர்..! |
தமிழ்நாட்டில் மலையாள நடிகைகள், பெண்கள் மீதான தாக்கம் அவ்வளவு சீக்கிரத்தில் மறையாது போலிருக்கிறது. நடிகைகளில் மலையாள நடிகையான நயன்தாரா நம்பர் 1 இடத்தில் இருக்கிறார். யு டியூப் பாடல்களில் ஜிமிக்கி கம்மல் புகழ் ஷெர்லி இருக்கிறார். அடுத்து ஒரு அடார் லவ் படத்தின் நாயகிகளில் ஒருவரான பிரியா பிரகாஷ் வாரியர் வந்துவிட்டார்.
ஒரு அடார் லவ் படத்தில் முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கிறார்கள். உமர் லுலு இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் பிரபல நடிகரும் இயக்குனருமான வினித் சீனிவாசன் பாடியுள்ள மாணிக்ய மலராய பூவி என்ற பாடல் சில தினங்களுக்கு முன்பு யு டியுபில் வெளியிடப்பட்டது. அந்தப் பாடலில் ஒரு இடத்தில் பிரியா பிரகாஷ் வாரியர் இரண்டு புருவங்களையும் உயர்த்தி, உயர்த்தி காட்டியது ரசிகர்களின் மனதைக் கொள்ளை அடித்துவிட்டது.
இப்போது அந்தப் பாடல்தான் யு டியூப் டிரென்டிங்கில் முதலிடத்தில் உள்ளது. உடனே பிரியா பிரகாஷ் வாரியர் யார் என்று சமூக வலைத்தளங்களில் தேட ஆரம்பித்து அவரைப் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை நொடிக்கு நொடி அதிகரித்துக் கொண்டடேயிருக்கிறது. கூடவே பல பேக் ஐடிக்களும் உருவாகி வருகின்றன.
18 வயதே பிரியா வாரியர் தற்போது கேரளாவில் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறார். அவரைக் கல்லூரியில் பார்த்து அழைத்து வந்து நடிக்க வைத்திருக்கிறார்கள். சீக்கிரமே அவரை தமிழ் சினிமா பக்கம் அழைத்து வந்துவிடுவார்கள்.
அடுத்த நயன்தாரா ரெடி ?.
youtube link - https://youtu.be/W0fKl43QmIE