மதுரை: தமிழகத்தில் கோயில்களுக்கு உள்ளே கடைகளை அகற்ற உத்தரவிட கோரி டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்தார். டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கில் பதில் அளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் வழக்கை 12-ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்து. மேலும் கோயில்களுக்குள் உண்ணாவிரதம், போராட்டம் நடத்த அனுமதி வழங்கக்கூடாது என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோயில்களுக்குள் கடை வைத்திருக்கும் புகைப்படம் தொடர்பான ஆதாரங்களும் சமர்பிக்கப்பட்டன.
இந்த வழக்கில் இந்து அறநிலையத்துறை ஆணையர், மதுரை மீனாட்சி அம்ம்மன் கோவில் இணை ஆணையர், மதுரை காவல்துறை ஆணையர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்தால் மட்டுமே அடுத்த கட்ட விசாரணை மேற்கொள்ளப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.