சென்னை: பதிவுத்துறை சார்பில் ரூ.176.44 கோடியில் ஸ்டார் 2.0 என்ற திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்துள்ளார். மேலும் மேம்படுத்தப்பட்ட www.tnreginet.gov.in என்ற இணையதளத்தையும் தொடங்கி வைத்துள்ளார், இந்த இணையதளம் மூலம் ஆவணப் பதிவு தொடர்பான தேவைகளை பொதுமக்கள் விரைவாக பூர்த்தி செய்ய ஏதுவாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.