ஜம்மு-காஷ்மீர்: சஞ்சுவான் ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் வீரமரணமடைந்த வீரர்களில் ஒருவரான சுபேதார் மடல் லால் சௌத்ரியின் உடலுக்கு மலர்வளையம் வைத்து வீரர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். காஷ்மீரின் சஞ்சுவான் ராணுவ முகாமுக்குள் நுழைந்த தீவிரவாதிகள் அங்கிருந்த பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச் சூட்டில் 5 ராணுவ வீரர்களும், ராணுவ வீரரின் தந்தை ஒருவரும் உயிரிழந்தனர். மேலும் கர்பிணிப் பெண், குழந்தைகள் உட்பட 10க்கும் மேற்ப்பட்டோர் படுகாயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.