சூர்யாவை தொடரும் 4 மில்லியன் பேர் | மூன்று நாளில் ரூ.40 கோடி - பட்டைய கிளப்பும் பேட் மேன் வசூல் | விரைவில் கலகலப்பு-3 : தயாராகும் சுந்தர்.சி | கார்த்திக் படத்தை காத்திருக்க வைத்த காலா | ஸ்கெட்ச் தெலுங்குப் பதிப்பில் 15 நிமிட காட்சிகள் நீக்கம் | அரசியலில் எதிரிகளாகும் ரஜினிகாந்த், கமல்ஹாசன் | மம்முட்டியின் 'மாமாங்கம்' படப்பிடிப்பு துவங்கியது | மோகன்லால் படத்தில் முக்கிய வேடத்தில் 'மாரி-2 வில்லன் | நிவின்பாலி பட வெற்றிக்கு பிரதாப் போத்தன் வருத்தம் கலந்த மகிழ்ச்சி..! | லாரியில் மணமக்களை அழைத்துவந்த மோகன்லால் பட இயக்குனர்..! |
திரு இயக்கத்தில் கார்த்திக்கும் அவரது மகன் கௌதம் கார்த்திக்கும் இணைந்து மிஸ்டர். சந்திரமௌலி என்ற படத்தில் நடித்து வருகின்றனர். ஜி. தனஞ்ஜெயன் தயாரிக்கும் இந்தப்படம் ஏப்ரல் 27 அன்று வெளியிடப்பட இருப்பதாக சில வாரங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையில், ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 2.0 படத்தின் போஸ்ட் புரொடக்ஷ்ன் பணிகள் திட்டமிட்டபடி முடியாததினால், அதே ஏப்ரல் மாதத்தில் ரஜினி நடிக்கும் காலாவை வெளியிட திட்டமிட்டனர்.
இது குறித்து கடந்த வாரம் ஊடங்களில் பரபரப்பான செய்திகள் அடிப்பட்டன. தற்போது அந்த செய்தி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2.0 வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த ஏப்ரல் 27ஆம் தேதி அன்று பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் 'காலா' ரிலீஸாகவிருப்பதாக தயாரிப்பாளர் தனுஷ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
காலா படத்தின் டப்பிங் பணிகள் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. காலா குறுக்கே வந்ததால் ஏப்ரல் 27 அன்று வெளியிடப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த மிஸ்டர். சந்திரமௌலி படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.