கொழும்பு மாநகரசபையில் மனோவின் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு 10 ஆசனங்கள்

கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட மனோ கணேசன் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, 10 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.

நேற்று முன்தினம் நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான மனோ கணேசன் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஏணி சின்னத்தில் தனித்துப் போட்டியிட்டிருந்தது.

இந்தத் தேர்தலில், அந்தக் கட்சிக்கு 27,168 வாக்குகள் கிடைத்ததன் மூலம், 10 ஆசனங்கள் கிடைத்துள்ளன.

எனினும், 110 உறுப்பினர்களைக் கொண்ட கொழும்பு மாநகரசபையில், ஐதேக 60 ஆசனங்களைக் கைப்பற்றி அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றுள்ளது.

23 ஆசனங்களுடன், சிறிலங்கா பொதுஜன முன்னணி இரண்டாவது இடத்திலும், 12 ஆசனங்களுடன் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மூன்றாவது இடத்திலும் உள்ளன.

10 ஆசனங்களுடன் ஐக்கிய முற்போக்கு கூட்டணி நான்காமிடத்திலும், 6 ஆசனங்களுடன் ஜேவிபி ஐந்தாமிடத்திலும் இருக்கின்றன.

தொடர்டர்புடைய செய்திகள்
காலத்தின் தேவை இது - கலங்கிக் கிடக்கும் தமிழர் அல்ல நாம் கைகோர்த்து நீதி கேட்போம் வாரீர்... 12/03/2018 போக்குவரத்து
கூகுல் நிறுவனத்தின் விளம்பர தொழில்நுட்பமான எட்சென்ஸ் பயன்பாட்டுக்கு தமிழ் மொழியும் உள்வாங்கப்பட்டுள்ளது. கூகுல் நிறுவனம் இதனை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இதன்படி
இலங்கை கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த வேளை கடற்பரப்பில் வைத்து 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் திருப்பி அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.