நாகையில் வயலுக்கு சென்ற விவசாயி எரித்து கொலை

2018-02-12@ 21:38:20

நாகை: நாகை திட்டச்சேரி அடுத்த அருண்மொழிதேவன் கிராமம் மெயின்ரோட்டை சேர்ந்தவர் மகேந்திரன்(38). விவசாயி. இவரது மனைவி கீதா. 2 மகள்கள் உள்ளனர். மகேந்திரனுக்கு திட்டச்சேரியில் 2 ஏக்கர் நிலம் உள்ளது. ேமலும் காரைக்கால்  மாவட்டம் ஊழியபத்து கிராமத்திலும் சொந்த நிலம் உள்ளது. ஊழியபத்துவில் உள்ள நிலத்தில் மகேந்திரன் பயிர் சாகுபடி செய்துள்ளார்.  நேற்று மகேந்திரன் வயலுக்கு சென்றுகொண்டிருந்தார். நாகை அருகே நரிதின்ன வாய்க்கால் அருகில் அவரை மர்ம நபர்கள் தாக்கி பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் அவர் துடிதுடித்து கருகி இறந்தார். இதைபார்த்த அப்பகுதியினர் திட்டச்சேரி போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

போலீசார்  அங்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிந்து அவரை கொலை செய்தது யார், எதற்காக கொன்றனர், யாருடனாவது முன்விரோதம் உள்ளதா என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  வயலுக்கு சென்ற விவசாயி எரித்து கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!