பதவி பறிபோகும் என்ற பயத்தில் ஜெயலலிதா படத்தை ஆட்சியாளர்கள் அவசர கதியில் திறப்பு : டிடிவி.தினகரன் குற்றச்சாட்டு

2018-02-12@ 12:46:53

தஞ்சை: பதவி பறிபோய்விடும் என்ற அச்சத்தில் ஜெயலலிதா படத்தை ஆட்சியாளர்கள் அவசர கதியில் திறந்துள்ளனர் என ஆர்.கே.நகர். தொகுதி எம்.எல்.ஏ. டிடிவி.தினகரன் தஞ்சையில் பேட்டியளித்துள்ளார். ஜெயலலிதா படத்திறப்பு விழாவை இன்னும் சிறப்பாக கொண்டாடியிருக்கலாம் என அவர் கருத்து தெரிவித்துள்ளார். 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வந்தால் பதவி பறிபோய்விடும் என்ற அச்சமே காரணம் என டிடிவி.தினகரன் விமர்சித்துள்ளார்.

ஜெயலலிதா படத்திறப்பு விழாவுக்கு தேசிய அளவில் தலைவர்கள் அழைத்து இருக்க வேண்டும் என அவர் கருத்து தெரிவித்துள்ளார். இந்த விழாவில் டிடிவி தினகரன், கருணாஸ் ஆகியோர் பங்கேற்கவில்லை. கோவை மாநகராட்சியில் முறையாக டெண்டர் விடாததால் உண்மையாக தொழில் செய்வோர் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். தமிழக மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க எடப்பாடி தலைமையிலான அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். மேலும் பேராசிரியர் மற்றும் உதவி பேராசிரியர் நியமனங்களில் லஞ்ச ஊழல் அதிகரித்து வருகிறது என டிடிவி.தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!