கோவை: கைது செய்யப்பட்ட பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். கணபதியை 5 நாட்கள் காவலில் விசாரிக்க கேட்டு கோவை நீதிமன்றத்தில் போலீசார் மனு அளித்துள்ளனர். ரூ.30 லட்சம் லஞ்சம் வாங்கியபோது கையும்களவுமாக கணபதி கைது செய்யப்பட்டார்.