தாம்பரம்: சென்னை தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் பகுதியில் கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக ரயில்வே மேம்பாலம் கட்டப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் இருந்து பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்லும் பெண்கள், பொதுமக்கள் என அனைவரும் ரயில்வே தண்டவாளத்தை கடந்து செல்வதற்காக பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, கிடப்பில் உள்ள ரயில்வே மேம்பாலத்தை உடனடியாக கட்டி முடிக்கவேண்டும் என தமிழக அரசு மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறையை வலியுறுத்தி சிவசேனா கட்சி சார்பில் நேற்று காலை பெருங்களத்தூர் இந்திரா காந்தி சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.