மருந்துக்கடையில் கொள்ளை

2018-02-12@ 00:02:58

தங்கவயல்: ராபர்ட்சன் பேட்டை அரசு பொது மருத்துவமனை எதிரே உள்ள தனியார் மருந்துக்கடையில்  கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். தங்கவயல், ராபர்ட்சன் பேட்டை ேபாலீஸ் சரகத்திற்கு உட்பட்ட ராபர்ட்சன் பேட்டை அரசு பொது மருத்துவமனை எதிரே மருந்துக்கடை வைத்திருப்பவர் ரவீந்திரநாத். நேற்று முன்தினம் இரவு இவர் வியாபாரத்தை முடித்துக்கொண்டு கடைக்கு பூட்டுப்போட்டு விட்டு வீட்டுக்கு சென்றார். நேற்று காலை வழக்கம் போல் கடையை திறக்க ரவீந்திரநாத் வந்தார்.

அப்போது மருந்துக்கடை திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, கடையில் வைத்திருந்த ரூ. 15,000 ரொக்கப்பணம் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது. இது குறித்து ராபர்ட்சன் பேட்டை போலீசில் ரவீந்திரநாத் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்து போலீசார் மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!