ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர், விசாரணை ஆணையத்தில் ஆஜராகவில்லை

2018-02-12@ 14:55:20

சென்னை: ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர், விசாரணை ஆணையத்தில் ஆஜராகவில்லை. இன்று ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில் ஓட்டுநர் ஐயப்பன் ஆஜராகவில்லை. உடல்நிலை சரியில்லாததால் ஆஜராக முடியவில்லை என வழக்கறிஞர் மூலம் அவர் தகவல் தெரிவித்துள்ளார். இதனால் ஐயப்பனுக்கு மற்றொரு நாள் சம்மன் அனுப்ப ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முடிவு செய்துள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!