மதுரை மீனாட்சியம்மன் கோவில் சீரமைப்பு பணிகள் குறித்தும் முதல்வர் ஆலோசனை

2018-02-12@ 14:54:45

மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ஏற்பட்ட தீவிபத்து குறித்தும், சீரமைப்பு பணிகள் குறித்தும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தியுள்ளார். இக்கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் மற்றும் துறை செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்று உள்ளனர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த 2-ந்தேதி இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த 30-க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து சாம்பலாயின. பிரகாரத்தில் இருந்த வீரவசந்தராயர் மண்டபம் முற்றிலும் சேதம் அடைந்தது. இந்த நிலையில் நீதிமன்றம் கடைகளை அகற்ற உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து கடைகள் அகற்றப்பட்டது.

இதனைத்தொடர்ந்து இன்று மதுரை மீனாட்சியம்மன் கோவிலை சீரமைக்கும்  பணிகள் குறித்தும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தியுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!