செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த ஆக்கூர் கிராமத்தில் கிளை அஞ்சலகத்தில் ஜீவரத்தினம்(42) என்பவர், 1997 முதல் 2013வரை போஸ்ட் மாஸ்டராக பணியாற்றி வந்தார். பின்னர் பணிமாறுதல் பெற்று சென்றார்.இந்நிலையில், அதிகாரிகள் ஆக்கூர் கிளை அஞ்சலகத்தில் ஆய்வு செய்தனர். அப்போது பலரின் சேமிப்புக்கணக்கில் இருந்து 1 லட்சத்து 53,356ஐ போஸ்ட் மாஸ்டர் ஜீவரத்தினம் கையாடல் செய்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டதும். ஜீவரத்தினம் தலைமறைவானார். மாங்காலில் பதுங்கியிருந்த ஜீவரத்தினத்தை போலீசார் கைது செய்து செய்யாறு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.